பொருளாதாரக் கொலைகாரர்களின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்

115

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பிரதிபலித்து நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கிய பொருளாதாரக் கொலையாளிகளை அம்பலப்படுத்தி, வரலாற்றுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், இத்தரப்பினர் இன்னமும் அரச அனுசரணையின் கீழ் சலுகைகளை அனுபவித்து தங்கள் வழமையான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்றும், இந்த முடிவை அவர்கள் மதிக்கவில்லை என்றாலும், அவர்களின் தவறான முடிவுகளுக்கு அனைத்து இலங்கையர்களுமே விளைவுகளை ஈடு கட்ட வேண்டியுள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கப்போகும் தீர்மானம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பதாகவும், எனவே அரசாங்கத்தால் எத்தகைய மெத்தனமான போக்கு ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என்பதனால், அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிய வேண்டியது அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, பி. பி. ஜயசுந்தர, அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, டபிள்யூ.டி. லக்ஷ்மன், சமந்த குமாரசிங்க மற்றும் நிதிச் சபை இணைந்து இந்த வங்குரோத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இந்தத் தீர்ப்பின் பிரகாரம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நபர்களுக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடவும், குறித்த நபர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை உடனடியாக நியமித்து, இந்த பொருளாதாரக் கொலைகாரர்களின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here