கிறிஸ்மஸ் மற்றும் நேற்றைய தினத்திற்காக(26) விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்ட 600 இற்கும் அதிகமான மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலும், தொம்பே மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சீன பிரஜை 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.