follow the truth

follow the truth

July, 16, 2025
HomeTOP3இஸ்ரோ மற்றுமொரு சாதனை - வெற்றிகரமாக இலக்கை அடைந்தது ஆதித்யா-எல்1

இஸ்ரோ மற்றுமொரு சாதனை – வெற்றிகரமாக இலக்கை அடைந்தது ஆதித்யா-எல்1

Published on

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது.

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி – சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.

 

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் கடும் மழை – வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூஜெர்ஸி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...

மின்சாரம் சட்டமூலம் – குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட விடயங்கள் சில தொடர்பில் இணக்கம்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது. பாராளுமன்ற...