அவுஸ்திரேலியா நாட்டிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்யும் உரிமை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தொழில் நிறுவனங்களில் வேலை மற்றும் பணியின்போது பயன்படுத்தும் செல்போன்களை பணி முடிந்ததும் ‘சுவிட்ச் ஆப்’ செய்துகொள்ளும் சட்டம் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
வேலைநேரத்திற்குப்பின் நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புதிய சட்டத்தை அவுஸ்திரேலியா அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டம் அவுஸ்திரேலியா பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.
ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியத்தில் இந்த புதிய சட்டம் அமுலான நிலையில் உலகில் பல்வேறு நாடுகளும் இந்த சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.