2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரலில் நியமிப்பு

200

வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் இன்னும் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் முன்னோக்கிச் சென்றால், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் கிராம சேவை உத்தியோகத்தர்களின் பிரதான பிரச்சினையான கிராம அதிகாரிகள் யாப்பு உருவாக்கப்பட்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இருப்பினும், இந்த பிரச்சினையில் விரைவில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here