follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1புறக்கோட்டையில் சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு

புறக்கோட்டையில் சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு

Published on

புறக்கோட்டையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 20 முதல் 25 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 255 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை தற்போது 275 ரூபாவிலிருந்து 280 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சீனி விலை அதிகரிப்பு எதுவும் இடம்பெறவில்லை என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விற்பனை விலை உயர்விற்கான காரணம் குறித்து புறக்கோட்டையில் உள்ள பல மொத்த வர்த்தகர்களிடம் வினவியபோது, அதற்கான காரணத்தை வெளிப்படுத்த அவர்கள் மறுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...