இலங்கையில் உருவாக்கியுள்ள வரட்சியைத் தாங்கக் கூடிய இரண்டு அரிசி வகைகள்

302

வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டம், காலநிலை நீதிக்கான மன்றம், காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுதல் மற்றும் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள காலநிலை செழிப்புத்திட்டம் என்பவற்றின் ஊடாக தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை காலநிலை பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நெல்லுக்கான நகலிகளை (குளோனிங்) உருவாக்குவதற்கு சுமார் 25 வருடங்கள் தேவைப்படுவதாகவும், இலங்கையில் வறட்சியைத் தாங்கும் இரண்டு அரிசி வகைகளை உருவாக்கியுள்ளதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் தொடர்பில் காணப்படும் கவலையை சமாளிப்பதற்குத் தொழில்நுட்பத்தின் அவசியமும், சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்தினார்.

மோசமான கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக 2022ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 34 வீதமாகக் குறைந்ததுடன், அந்நியச் செலாவணி இல்லாத நிலையிலும் அரிசியை இறக்குமதி செய்யததாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here