நாளை இந்திய பொதுத் தேர்தல்

557

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது.

இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லோக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

பொதுத் தேர்தல் 2 1/2 மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட தேர்தல் நாளையும் (19), 2வது கட்டம் ஏப்ரல் 26ம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7ம் திகதியும், நான்காம் கட்டம் மே 13ம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20ம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25ம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ம் திகதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 4-ம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும். இந்த பொதுத் தேர்தலில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வலுவான தலைமையை வழங்கி வருகிறார். மோடியின் பிஜேபி தங்களுக்கு நட்பான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயர்.

இந்த பொதுத் தேர்தலில் மோடியின் பாஜக தனித்து 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

2019 பொதுத் தேர்தலில் மோடி இரண்டாவது முறையாக பிரதமரானார். அந்தத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இது ஒரு மகத்தான சாதனை. 1980ல் பாஜக இந்து தேசியவாதக் கட்சியாக அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, இவ்வளவு பெரிய வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறை.

நாளை (19) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. 15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது ‘பாரதிய ஜனதாவும்’ தங்களது கட்சி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here