follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1இந்திய வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Published on

இந்திய வெளிவிவகார எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(20) இடம்பெற்றது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அண்டைய நாடான இந்தியாவிடம் இருந்து கிடைத்த உதவிகள் மற்றும் ஒத்தாசைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் நட்புறவு, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் அவ்வாறே பேணப்படும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார்.

இலங்கையின் வீடமைப்புத் திட்டங்களுக்கும், சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கும் இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பை என்றும் மறக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஸ்மார்ட் கல்வியையும், புதிய உலகிற்கு ஏற்ற கல்விக் கொள்கையையும் உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், மீண்டும் ஒருமுறை இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவைப் பேணத் தயாராக இருப்பதாகவும், நட்பை மேலும் வளர்த்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...