follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1வெளிநாடு சென்று முறைகேடாக நடப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள்

வெளிநாடு சென்று முறைகேடாக நடப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள்

Published on

வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கருப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் மாற்றட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று(08) நடைபெற்றது.

அண்மைக்காலமாக இஸ்ரேலிய விவசாயத் துறையில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலிய விவசாயத் துறை பணிகளுக்கான வாய்ப்புகளை இலங்கையர்கள் பெறுவது மகிழ்ச்சியான செய்தி என தெரிவித்தார்.

” நாங்கள் முதல்கட்டமாக இஸ்ரேலுக்கு அனுப்பிய பணிக் குழுக்களின் நெருக்கடிகள் காரணமாக, இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இலங்கையில் போன்று எம்மவர்களின் சிலர் அங்கு போராட்டம் நடத்தியதால் இவ்விளைவு ஏற்பட்டது எனவே நாம் தொடர்ந்தும் இஸ்ரேலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் எங்களுக்கு மீண்டும் விவசாயத் துறையில் பணியாளர்களை அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாளை இஸ்ரேலில் விவசாயத்துறையில் பணிக்காக செல்லும் 43 குழுவினர் சிறந்த முறையில் பணியாற்றுவதன் மூலம் இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பு நிமிர்த்தம் செல்லக் காத்திருக்கும் 8000 பேருக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொக்கோ விலை அதிகரிப்பு

இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம்...

வெள்ள அனர்த்தம் – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய...

சாதாரண தரப் பரீட்சை – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம்...