ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பிற்காக தேவையான அளவு வழங்குவதற்கு முப்படைகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் பல பொலிஸ் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செயலாளர், வன்முறைகள் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
எந்தவொரு அழைப்பு விடுக்கப்பட்டாலும் பொலிஸாருக்கு உதவுவதற்கு ஆயுதப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.