கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 18 இலட்சம் ரூபாவுக்கும் விஞ்சாத தொகையை வருடாந்த வருமானமாகப் பெறுவோருக்கு அறவிடப்படும் நிறுத்தி வைத்தல் வரியை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வரிவிதிப்புக்கு உட்படுவோர் குறைந்த வருமானத்தைக் கொண்டவர்கள் என்பதால் குறித்த வரி விதிப்பிலிருந்து விடுபடுவதற்கு சுயபிரகடனத்தைச் சமர்ப்பிக்கின்ற முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டது.
அதற்கமைய, அத்தகைய சுயபிரகடனத்தை அறிமுகப்படுத்தவும், வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை சமர்ப்பிப்பதையும் கட்டாயமாக்குவதற்கான திருத்தங்களுடன், உள்நாட்டு இறைவரி சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.