follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்உக்ரைன் இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவோம் - நேட்டோ அறிவிப்பு

உக்ரைன் இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவோம் – நேட்டோ அறிவிப்பு

Published on

உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷ்யா போரை தொடுத்து வருகிறது.

உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன.

ஆனால் தற்போது உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோவும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.

இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறும் போது,“தங்களுக்கு எந்த நாடும் உதவவில்லை. தாக்குதலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தநிலையில் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவோம் என்று நேட்டோ படை தெரிவித்து உள்ளது.இது குறித்து நேட்டோ படையின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோன் பெர்க் கூறியதாவது,“உக்ரைன் அரசை கவிழ்க்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

நிலம், வான்வெளி, கடல் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளை நேட்டோ பிராந்தியத்தில் நிலை நிறுத்தி வருகிறோம். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அதிக அளவில் வழங்க முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

இதற்கிடையே பிரான்ஸ் தனது 500 படை வீரர்களை ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. நேட்டோ படைக்கு வலுச் சேர்ப்பதற்காக 500 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் இராணுவத் தலைவர் புர்க் ஹார்க் கூறும்போது,“ருமேனியாவில் நேட்டோ படையை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 500 வீரர்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கூடிய வாகனங்கள் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த...

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா...

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...