சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் விசேட நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருளை சேகரித்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதால், எரிபொருளை வைத்து தனிப்பட்ட முறையில் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.