follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP2எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் மாற்றம்

Published on

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 310 ரூபாவாகும்.

அதேபோல், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி, 465 ரூபாவாக இருந்த சூப்பர் டீசலின் புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை இன்று முதல் அமுலாகும் வரையில் குறைத்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 310 ரூபாவாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பழம்பெரும் நடிகை பி. சரோஜா தேவி காலமானார்

தமிழ் சினிமாவின் சிகரமான நடிகைகளில் ஒருவரும், பல தலைமுறைகளின் மனங்களில் இடம் பிடித்தவருமான பழம்பெரும் நடிகை பி. சரோஜா...

ஜனவரி முதல் ஜூலை வரை 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

இந்த ஆண்டு கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 13ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 68...

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த கைது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை

மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரும் பற்றிய தகவல் குறித்து,...