கொரியாவின் சியோலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்த கூட்டத்துடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பொருளாதார பங்காளித்துவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.