நிதி நிறுவன சட்டத்தை மீறி நிறுவனமொன்றை நடாத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ‘சக்விதி ரணசிங்க’ என்ற சந்தன வீரகுமார மற்றும் அவரது முன்னாள் மனைவி குமாரி அனுராதனி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலாலே 18 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், 24 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு சட்டமா அதிபரினால் வழக்கு இன்று (12 ம் திகதி) ஒப்படைக்கப்பட்ட போது, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ், பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகி, உண்மைகளை முன்வைத்தார். நீதிபதி பரிசீலித்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள அனுமதித்தார்.