வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குமாறும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச ஊழியர்கள் இன்று (12) முன்னெடுக்கும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு செத்சிரிபாயவுக்கு அருகில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.