மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
2018 வழிகாட்டுதல்களின்படி, மின்சார பிரிவின் கீழ் வாகனத்தின் மதிப்பில் 90% வரை நிதி வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு, வணிக வாகனங்களுக்கு 80% ஆகவும், மோட்டார் கார்கள், SUVகள் மற்றும் வேன்களுக்கு 60% ஆகவும், முச்சக்கர வண்டிகளுக்கு 50% ஆகவும், பிற வாகனங்களுக்கு 70% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மின்சாரம் அல்லாத வணிக வாகனங்களுக்கு இதுவரை கிடைத்த 90% நிதி வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு 80% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை மின்சாரம் அல்லாத மோட்டார் கார்கள், SUVகள் மற்றும் வேன்களுக்கான 50% கடன் வரம்பு 60% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சாரம் அல்லாத முச்சக்கர வண்டிகளுக்கான பெறுமதியில் இதுவரை 25% வரை மட்டுமே கிடைத்த நிதி வசதி, இன்று முதல் 50% ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.