வர்த்தக அமைச்சின் வணிகத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், இலங்கை மற்றும் துருக்கி குடியரசுக்கிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒருங்கிணைந்த குழுவின் மூன்றாவது அமர்வு வர்த்தக, வாணிபத்துறை, உணவுப் பொருட்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் துருக்கி குடியரசின் தேசிய கல்வி அமைச்சர் யூசுப் டெகின் தலைமையில் இன்று (24) கொழும்பில் ஆரம்பமானது.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை தொடர்ந்தும் வளர்த்துக் கொள்வதற்காக இக்கலந்துரையாடல் நடைபெறுகிறது.