போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் ரெமி லம்பேர்ட் இடையே இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.
ஊழல் இல்லாத தற்போதைய அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த பிரெஞ்சு அரசாங்கம் தயாராக இருப்பதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் சேவையின் தரத்தை மேம்படுத்துதல், நாட்டிற்கு பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவித்தல், கொழும்பு, கண்டி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரெஞ்சு கலாச்சார மையங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கலந்துரையாடப்பட்டது.