ஸ்பெயினின் தென் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எஸ்டெபோனாவில் தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார்.
மலைப்பகுதியில் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன் இராணுவப் பிரிவும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த கோடை காலத்தில் ஐரோப்பா நாடுகள் சில பல காட்டுத்தீக்கு உள்ளாகிவருகின்ற நிலையில், காலநிலை மாற்றம் காட்டுத்தீயைத் தூண்டும் வெப்பமான, வறண்ட வானிலையின் அபாயத்தை அதிகரிக்கிறது.