அநுராதபுர சிறைச்சாலை வளாகத்தில் இழிவாக மற்றும் சட்டவிரோதமான முறையிலும் நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் இழிவான நடத்தையை கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், அவருடைய நடத்தை நாட்டில் தற்போது காணப்படும் அராஜக நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.