இத்தாலியில் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயம்

362

இத்தாலியில் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல், அரசு மற்றும் தனியார் அனைத்து ஊழியர்களுக்கும் ‘ தடுப்பூசிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை “பாதுகாப்பு நிலையில்” வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.

“green pass” எனப்படும் குறித்த சான்றிதலில் தடுப்பூசி ஏற்றியமை, தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் அல்லது தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அட்டையின்றி எவரும் தொழிலுக்கு செல்ல முடியாது எனவும் குறித்த “green pass” சான்றிதழ் அனைத்து ரயில் நிலையங்கள், திரையரங்குகள், உணவகங்கள், நீச்சல் தடாகங்கள் ஆகியவற்றுக்கும் கட்டாயமாக்கப்படவுள்ளது

பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கொரோனா ‘கிரீன் பாஸ்’ கட்டாயமாக்கும் முதல் ஐரோப்பிய நாடு இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here