இந்த வருடமும் நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து

373

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடமும் நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து செய்யப்படுவதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு சாதனைக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11-ம் திகதி வரை அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி மூலம் மிக எளிமையான முறையில் வரும் டிசம்பரில் 10 திகதி நோபல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து செய்யப்படுகிறது என நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் விதர் ஹெல்ஜெசன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here