போதுமான பணம் இல்லாமையினால் மே 3 மற்றும் 4 ம் திகதிகளுக்கு விமானங்களை இரத்து செய்யப் போவதாக Go First நிறுவனம் அறிவித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோ பர்ஸ்ட் நிறுவனம், நாட்டின் கட்டணம் குறைந்த விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த நிறுவனம் சேவையாற்றி வருகிறது.
தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கோ பர்ஸ்ட் நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்றாடம் செலுத்த வேண்டிய தொகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் பணம் செலுத்தாவிட்டால் கோ பர்ஸ்ட் நிறுவன விமானங்களுக்கு எண்ணெய் வழங்கப்படாது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனையடுத்து நிலைமை கைமீறி போனதைத் தொடர்ந்து மே 3 மற்றும் 4-ம் திகதிகளுக்கு அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாக கோ பர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.