பேலியகொடை மெனிங் சந்தையில் விற்பனை நிலையங்கள் வழங்குவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சொத்து மற்றும் காணி அபிவிருத்தி) ஈ.ஏ.சி. பிரியசாந்த கடைகளை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக யாராவது உணர்ந்தால் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் அதுபற்றி பரிசீலிக்க தனது அதிகார சபை தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேலியகொடை மெனிங் சந்தையின் செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு இதுவரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரியஷாந்த மேலும் தெரிவிக்கின்றார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.