உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினால் இவ்வருட டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் நீடிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.