எத்தனை சவால்கள், குற்றச்சாட்டுகள் வந்தாலும் கிராமங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இயங்கி வருவதாகவும், ‘ஹூ’ கூறும் அரசியல் கட்சிகளின் நோக்கம் பொதுஜன பெரமுனவை கிராமத்திற்கு வரவிடாமல் தடுப்பதே எனவும் நாமல் ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவாக கிராமத்திற்கு செல்கிறது என்றும் கொள்கையே இல்லாத சில அரசியல் கட்சிகளுக்கு ‘ஹூ’ கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.