ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு ஜிஐ குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (12) நிராகரித்தார்.
வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு அழைக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வழக்கின் விசாரணை திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.