follow the truth

follow the truth

July, 16, 2025
HomeTOP1டயானாவுக்கு எதிராக ரூபவாஹினி வழக்கு

டயானாவுக்கு எதிராக ரூபவாஹினி வழக்கு

Published on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த அலைவரிசையில் நேரலை ஒளிபரப்புக்கு நேரம் ஒதுக்கியதன் பின்னர் அது தொடர்புடைய தொகையை செலுத்தத் தவறியதன் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறக்குறைய பத்து இலட்சம் ரூபாவை அவர் செலுத்தத் தவறிவிட்டதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

நிலுவைத் தொகையை வழங்குமாறு பலமுறை அவருக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் அவர் பணத்தினை செலுத்த தவறிவிட்டார்.

நவகமுவ பெரஹெராவை நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சியில் நேரத்தை ஒதுக்கியுள்ள அவர், அதற்கான செலவை தாமே தனிப்பட்ட முறையில் செலுத்துவதாக எழுத்துமூல அறிக்கையையும் கொடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

சிதறியுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக, விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விளையாட்டு சங்கங்களுடன்...

சிரிய இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்த இஸ்ரேல்

சிரியாவின் ஸ்வீடாவின் ட்ரூஸ் நகரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில...

பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக்...