உக்ரேன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து ஐ.நா. பொதுச் சபை இன்று இடை நீக்கம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
“ரஷ்யாவை மனித உரிமை பேரவையிலிருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை பேரவையிலிருந்து ரஷ்யாவை இடைநீக்க முடியும் என்ற நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது,